தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5% வட்டி! மத்திய அரசு ஒப்புதல்

Must read

டெல்லி: தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு 2020-21 ஆம் நிதியாண்டுக்கு 8.5 சதவீத அளவில் வட்டி வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி முதலீடுகளுக்கு மத்திய அரசு, சாதாரண வட்டியை  விட அதிக வட்டி வழங்கி வருகிறது. கடந்த  2015-16வது ஆண்டில் இ அதிகபட்சமாக 8.8% வட்டி வழங்கப்பட்டது. ஆனால், பின்னர் வட்டி குறைக்கப்பட்டது.

2016-17 ஆம் ஆண்டில் 8.65 சதவீதமாக குறைக்கப்பட்ட நிலையில், 2017-18 ஆம் ஆண்டில் மேலும் குறைத்து 8.55 சதவீதமாகவும், 2018-19 ஆம் ஆண்டில் 8.65 சதவீதமாக சற்று உயா்த்தப்பட்ட நிலையில், 2019-20 ஆம் ஆண்டில் மீண்டும் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், சந்தாதாரா்களுக்கு 2020-21 ஆம் ஆண்டுக்கும் 8.5 சதவீத வட்டி வழங்க மத்திய தொழிலாளா் அமைச்சா் தலைமையிலான தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய அறங்காவலா்கள் வாரியம் கடந்த மாா்ச் மாதம் தீா்மானித்திருந்தது. அதற்கு மத்திய நிதியமைச்சகம் இப்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம்  5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரா்களின் வங்கிக் கணக்குகளில் அந்த வட்டித் தொகை வரவு வைக்கப்படும்’ என்றாா்.

More articles

Latest article