மாணவர்கள் மீது குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு வெளியேற்றுவதில் கவனம் செலுத்துங்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்

Must read

சென்னை: மாணவர்கள் மீது குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதில் மத்தியஅரசு கவனம் செலுத்த வேண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்றுள்ள பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு போர் ஏற்பட்டுள்ளதால், வெளியேற முடியாமல் சிக்கி உள்ளனர். இதனால் பலர் தங்களை காப்பாற்றும்படி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக  மத்தியஅமைச்சர் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்த்து, அங்குள்ள மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் கவனம் செலுத்துங்கள் என்று வலியுறுத்திஉள்ளது.

உக்ரைனை சார்ந்தவர்கள் இதுவரை, 6,60,000க்கும் அதிகமானோர் வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். அண்டை நாடான போலந்தில் மட்டும் 400,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. இதனிடையே நேற்று இந்திய மாணவர் ஒருவர் இந்த தாக்குதலில் உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்திய அரசு அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில், மாணவர்கள் மீது மீது குறை கூறுவதை நிறுத்திவிட்டு, அவர்களை மீட்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில்,  இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் மாணவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு விடப்பட்டுள்ளனர் என்ற உக்ரைனில் இருந்து வரும் செய்தியால் வருத்தமாக உள்ளது. மாணவர்கள் போர்த் தாக்குதல்கள் மற்றும் விரோத எல்லைகளை எதிர்கொள்ளும் போது, மத்திய அரசு மாணவர்கள் மீது குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் உயிரையும் பாதுகாப்பது இந்திய அரசின் பொறுப்பு. @PMOIndia அவர்களின் அமைச்சர்கள் தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதில் இருந்து ஆட்சி செய்ய வேண்டும் மற்றும் ஒவ்வொரு இந்தியரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார்.

More articles

Latest article