டெல்லி: நீதி வழங்கப்பட்டிருப்பது குடும்பத்தில் உள்ள அனைவரையும் நிம்மதியடைய அனுமதிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசிதரூர் தெரிவித்து உள்ளார்.

சுந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் இருந்து சசிதரூரை டெல்லி உயர்நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள சசிதருர்,
உண்மை என்ன என்பது குறித்து நீதி வழங்கப்பட்டுள்ளது. சுனந்தாவின் சோகமான மறைவுக்குப் பிறகு என்னை சூழ்ந்திருந்த நீண்ட கனவுக்கான குறிப்பிடத்தக்க முடிவு. இது, எங்களது குடும்பத்தில் உள்ளவர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தும், சுனந்தா குறித்த விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்தும் என்று தெரிவித்து உள்ளார்.

Patrikai.com official YouTube Channel