சென்னை: “திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல” என  23ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கூறி உள்ளார்.

திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி உள்ளார்.

திராவிட கட்சி, திமுக போன்றவை இந்துக்களுக்கும்., இந்து கோவில்களுக்கும் எதிரான மனநிலையில் செயல்பட்டு வருகின்றன. பல இடங்களில் இந்து கோவில்களை இடித்து வந்துள்ளதுடன்,  பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, கோவில்களக்கு செல்லும் மக்களை தொல்லைப் படுத்தி வருகின்றது. திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்திலும், இந்துக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து, நீதிமன்ற உத்தரவையும் மதிகாத நிலையே காணப்படுகிறது.

அதுபோல  உதயநிதி ஸ்டாலின்,  திமுகவைச் சேர்ந்த ராஜா, பொன்முடி உள்பட பலர் இந்துக்களை இழிவாக பேசி வருகின்றனர். ஆனால், முதல்வரின் மனைவி துர்காவோ கோவில் கோவிலாக சென்று, பூஜை புனஸ்காரங்களை செய்து வருகிறார். தனது கட்சியினரை கண்டிக்காத ஸ்டாலின் நடவடிக்கை இந்து மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  தேர்தலையொட்டி, இந்து மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில், திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை எப்போதும் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து தமிழ் மக்களுக்காக சண்டை செய்துள்ளதை பெருமையாக சொல்லிக் கொள்ள முடியும். சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி என்பதுதான் நமது உண்மையான குறிக்கோள். அந்த வகையில் பல்வேறு மக்கள் திட்டங்களை இந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளோம்.

கல்வி ஒன்றுதான் நம்மிடமிருந்து யாரும் திருட முடியாத சொத்து. அந்த வகையில் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியின் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி கண்டுள்ளது.

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அப்படி பொய் சொல்லி பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக எவ்வளவோ கொடுமை செய்து வருகிறார்கள். ஆனால், சிறுபான்மை யினர் மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் திமுக களத்தில் இருக்கும். 1975-ல் மிசா போரை அன்றைய ஒன்றிய அரசு நடத்திய போது அதை எதிர்த்து நடத்தினேன். இப்போதும் நமக்கு எதிரான போரை எதிர்த்து நிற்கிறேன்”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]