டில்லி,

ரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கு காரணமாக நேரில் ஆஜராக  டிடிவி தினகரனுக்கு டில்லி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. இதன் காரணமாக அவர் கைது செய்யப்படலாம் என டில்லி வட்டார தகவல்கள் கூறுகினற்ன.

இரட்டை இலை சின்னத்தைப் பெற ரூ.1.30 கோடி லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தெற்கு டில்லியில் உள்ள ஒரு ஓட்டலில் நடத்திய சோதனையின்போது, தரகர் சதீஷ் சந்திரா என்பவரிடம் இருந்த 1 கோடியே 30 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து, அந்த பணம் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது.

போலீசாரிடம்,  சசிகலா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் பணம் கொடுத்தாக வாக்குமூலம் கொடுத்ததை தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

விசாரணையை தொடர்ந்து டிடிவி தினகரன் கைது செய்யப்படலாம் என டில்லி வட்டார தகவல்கள் கூறுகிறது.