ஆதாரில் திருத்தம் செய்ய இன்று முதல் சிறப்பு வசதி! அரசு அறிவிப்பு

Must read

சென்னை,

தார் கார்டில் உள்ள விவரங்களை திருத்தம் செய்ய விரும்புபவர்கள் தமிழக அரசின் இ.சேவை மையத்ததை அணுகி திருத்தம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள ஆதார் அட்டையில் பலருக்கு டெலிபோன் எண் மற்றும் முகவரிகள் மாறி உள்ளது. இதுபோன்ற தவறுகளை திருத்தம் செய்ய தமிழக அரசு சிறப்பு வசதிகளை தற்போது ஏற்படுத்தி உள்ளது.

இதற்கான சேவை ஏற்கனவே உள்ள தமிழக அரசின் இ.சேவை மையஙகளில் இன்று முதல் சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்மூலம், ஆதார் அட்டைகளில் பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விபரங்களை  திருத்தம் செய்துகொள்ளலாம் என தமிழக அரசு கேபிள் டி.வி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசின் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றில் செயல்பட்டு வரும் நிரந்தர ஆதார் மையங்களில் இன்று முதல் பொது மக்கள் ஆதார் விபரங்களை திருத்தம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விபரங்களை திருத்தம் செய்துகொள்ள கட்டணமாக 25 ரூபாயும், ஆதார் அட்டையை அச்சிட்டு பெறு வதற்கு 10 ரூபாயும் கட்டணமாக பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆதார் மையங்களின் சேவை தொடர்பாக 1800 4252 911 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article