சிஏஏக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சட்ட உதவி வழங்கும்! பிரியங்கா காந்தி

Must read

டெல்லி:

சிஏஏக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றவர்களுக்கு காங்கிரஸ் கட்சி துணைநிற்கும் என்றும், அவர்களுக்கு  சட்ட உதவி வழங்கும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (CAA) எதிராக காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. அதுபோல மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், பல இடங்களில் காவல்துறையினர் துப்பாக்கி சூடும் நடத்தி உள்ளனர். இதில் 25க்கும் மேற்பட்டோர் உயரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், குடியுரிமை எதிர்ப்பு (திருத்த) சட்டம் (சிஏஏ) போராட்டங்களில் பங்கேற்றதற்காக வழக்குத் தொடரப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக, காங்கிரஸ் கட்சி சட்ட உதவி வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர்களிடம் நடத்திய ஆலோசனைக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி,  சிஏஏக்கு எதிராக  அமைதியாக நடைபெற்ற  போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சட்ட உதவி வழங்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுடன் கட்சி நிற்கிறது என்றும் கூறினார்.

More articles

Latest article