தவிடு ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை வரும் செப்டம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கால்நடை தீவனங்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் எண்ணெய் நீக்கப்பட்ட தவிடு ஏற்றுமதியை 2023ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இதனால் கால்நடை தீவனங்களின் விலை கட்டுப்படுத்தப்படும் என்று உள்நாட்டு தீவன உற்பத்தி அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இதற்கான தடையை மேலும் நீடித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.