பெங்களூரு:

ர்நாடகாவில் பாரதியஜனதாவுக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும், குஜராத் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி, மோடி கூட்டத்தில் நாற்காலிகளை தூக்கி வீசுங்கள் என்று பேசினார்.

இந்த  சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து , கர்நாடக பாரதியஜனதா கட்சியினர் புகார் கொடுத்ததை அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 12ங்தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக தேர்தல் பிரசாரம் அனல்பறந்து வருகிறது.

ஆட்சியை பிடிக்க பாரதியஜனதாவும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரசும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,  பா.ஜ.க.வுக்கு எதிராக குஜராத் எம்.எல்.ஏ.வான ஜிக்னேஷ் மேவானி தொடர் பிரச்சாரங்கள் செய்து வருகிறார்.

நேற்று கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய ஜிக்னேஷ், கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் என்னவானது என மோடி பிரசாரத்துக்கு வரும்போது  கேள்வி எழுப்புங்கள் என்று கூறினார்.

அப்போது அவர் கூறியபடி, அனைவரது வங்கி கணக்குகளிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்ற வாறுக்குறுதி,  2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள்,  வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் மீட்கப்படும் என்றெல்லாம் அளித்த வாக்குறுதிகள் என்னவானது என கேள்வி கேளுங்கள் என்றும், அப்போது மோடிக்கு எத்ராக நாற்காலிகளை தூக்கி வீசி ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் என்றும் பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட பாஜகவினர் போலீசில் புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து ஜிக்னேஷ் மீது,   போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்