ஜெய்ப்பூர்:

மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு ஜாமின் வழங்கி ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

19 ஆண்டுகளுக்கு முன்பு மான் வேட்டையில் ஈடுபட்டதாக இந்தி முன்னணி நடிகர் சல்மான் கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடந்தது. நேற்று முன்தினம் சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஜாமீன் கோரி மாஜிஸ்திரேட் ரவீந்திர குமார் ஜோஷி முன்பு தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் இன்று (7ம் தேதி) தீர்ப்பை வழங்குவதாக மாஜிஸ்திரேட் அறிவித்தார்.

இதையடுத்து சல்மான்கானுக்கு ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சல்மான்கான் இன்று சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.