ஐதராபாத்:

வெயில் கொடுமை காரணமாக ஆந்திராவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். வெப்பம் காரணமாக சுருண்டு விழுந்த அவர்கள் பரிதாபமாக உயரிழந்தனர்.

கோடை காலம் ஆரம்பித்துள்ள நிலையில், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் மட்டும் 5 பேர் பலியாகியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான சின்னக்கா தக்காளி பறித்துக்கொண்டி ருந்தபோது வெப்பம் தாங்காமல் சுருண்டு விழுந்து இறந்தார். மேலும் இதுபோல வெப்பம் காரணமாக  சித்தூர் மாவட்டத்தில் மட்டும்ஒரே நாளில் வெயிலுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.

இவர்கள் அனைவரும் கூலி தொழிலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது