டில்லி:

மோடி தலைமையிலான  பாரதியஜனதா மத்திய அரசின்  4 ஆண்டு ஆட்சி காலத்தில்  தலித்களுக்கு எந்தவித உதவியும் கிடைக்கவில்லை என்று, பாஜகவை சேர்ந்த தலித் எம்.பி. மோடிக்கு பகிரங்கமாக குற்றம் சாட்டி கடிதம் எழுதி உள்ளார்.

ஆனால், இந்த கடிதத்திற்கு பாஜக இதுவரை பதிலும் அளிக்கவில்லை. அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உத்தரபிரதேசம் நாஜினா தொகுதியை  சேர்ந்த பாரதியஜனதா எம்.பி.யான யஷ்வந்த் சிங், பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில், பாரதியஜனதாவின் 4 ஆண்டு ஆட்சியில் தலித்களுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என்றும்,  “ஒரு தலித் என்ற முறையில் என் திறமைகளை பயன்படுத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும், தான்  இட ஒதுக்கீட்டின் காரணமாக நான் எம்.பி. ஆனேன் என்றும், நாடு முழுவதும் 30 கோடி தலித்கள் உள்ளார்கள் என்றும், ஆனால், மோடி அரசாங்கம் அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த கடிதம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இந்த கடிதம் குறித்து பாரதியஜனதா தலைமை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

தற்போது வட மாநிலங்களில் வன்கொடுமை சட்ட திருத்தம் காரணமாக கலவரங்கள் நடைபெற்று வரும் நிலையில், உ.பி. மாநில பாஜக தலித் எம்.பி.யின் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.