கோல்டுகோஸ்ட்:

ஸ்திரேலியாவில்  71 நாடுகள் பங்கேற்கும் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்டில் கடந்த 4ந்தேதிமுதல் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் பெற்று பதக்கப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை மனிக்கா பத்ரா , மலேசிய வீராங்கனையான யுங் ஹோவை 3-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

அதுபோல ஆண்கள் டேபிள் டென்னிஸ் போட்டியிலும் இந்திய வீரர் அரை இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

மேலும் டேபிள் டென்னிஸ் போட்டியில்,   இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன், ஹமீத் தேசாய் இணை, மலேசியா இணையான ஜாவன்  சூங், ஷீ பெங் இணையை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

பேட்மின்டன் போட்டியில்,  இந்தியாவின் சிக்கி ரெட்டி, அஸ்வினி பொன்னப்பா இணை  அணியினர் மொரிசியசின் ஆர்லி  மரியா,  நிக்கி ஷான் இணையை வீழ்த்த  காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஜிம்னாஸ்டிக் போட்டியில், இந்தியாவை சேர்ந்த யோகேஷ்வர் சிங், 75,600 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

இந்தியாவை சேர்ந்த கிடாம்பி ஸ்ரீகாந்த் பேட்மின்டன் போட்டியில், காலிறுதியில் வெற்றிபெற்று  முன்னேறி உள்ளார்.

பட்டர்பிளை நீச்சல் போட்டியில் இந்திய வீரர் சஜன் பிரகாஷ் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

அதுபோல ஸ்ரீஹரி நடராஜ் 50 மீட்டர் கேப் ஸ்டோக் நீச்சல் போட்டியில் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.