மும்பை:

2018ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இன்று மும்பையில் தொடங்குகிறது.

நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டி இன்று தொடங்கி  மே மாதம் 27ந்தேதி வரை பல்வேறு மாநிலங்களில் நடைபெற உள்ளது.

இன்று மும்பையில் கோலாகலமாக போட்டி தொடங்குகிறது. ‘

சென்னை சூப்பர் கிங்ஸ்,  மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்பட 8 அணிகள் இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்கிறது.

ஏற்கனவே ஐபிஎல் சூதாட்டத்தில் சிக்கியதாக தடை செய்யப்பட்ட,  சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள், 2 ஆண்டுகள் தடைக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் களமிறங்க இருப்பதால் ஐபிஎல் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புடன்  நடைபெற உள்ளது.

மேலும் இந்த ஆண்டு முதல் ஐ.பி.எல். போட்டியில் நடுவரின் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் முறை (டி.ஆர்.எஸ்) முதல் முறையாக நடைமுறைக்கு வருவதும் குறிப்பிடத்தக்கது.