கோல்ட்கோஸ்ட்:

ஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், இன்று நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஹாக்கி போட்டி சமனில் முடிந்தது.

இந்தியா பாகிஸ்தான் இடையே வழக்கம்போல பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் போட்டி தொடங்கியது. தொடக்கத்தில் விறுவிறுப்பாக விளையாடி இந்திய அணி, 14-வது நிமிடத்தில் இந்திய வீரர் தில்ப்ரீத் சிங் கோல் அடித்து ஆட்டை மேலும் விறுவிறுப்பாக்கினார்.

அதைத்தொடர்ந்த,  பெனால்டி கார்னர் மூலமாக 2-வது கோலை அடித்தார் ஹர்மண்ப்ரீத் சிங்.

அதையடுத்து வெறித்தனமாக ஆடத்தொடங்கிய பாகிஸ்தான் அணியினர்,  39-வது நிமிடத்தில் கோல் போட்டு பாகிஸ்தான் ஆட்டத்தை மேலும் பரபரப்பாக்கியது.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஆட்டத்தில்,  கடைசி நிமிடத்தில் வீடியோ ரெஃபரல் மூலமாக பெனால்டி கார்னர் வாய்ப்பைப் பெற்ற பாகிஸ்தான் அதில் கோலடித்து சமன் செய்தது.

இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் 2-2 என சமனில் முடிந்தது.

இந்தியா ஏற்கெனவே கடந்த 2010, 2014 போட்டிகளில் விளையாடி  வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.