ஐசிசி உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றியிருந்தால் அதை அரசியலாக்க பாஜக திட்டமிட்டிருந்ததாகவும் அது நடக்காமல் போனதால் பாஜக-வின் திட்டம் கைகூடவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் சமூகவலைத்தள பிரிவின் தலைவர் சுப்ரியா ஷிரினேட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியான சமூகவலைத்தள பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ள அவர் :

• உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றி இருந்தால், ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பேனர்கள் வைத்து கொண்டாட பாஜக திட்டமிட்டிருந்தது.

• வெற்றியைக் குறிக்கும் (V) அடையாளங்களுடன் கைகளை உயர்த்தி இந்திய அணியின் ஜெர்சியை பிரதமர் மோடி அணிந்திருப்பது போல் வடிவமைக்கப்பட்ட பேனர்கள் வைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.

• தேர்தல் பதாகைகளை அகற்றிவிட்டு, இந்திய வீரர்களுடன் மோடி இருக்கும் புகைப்படங்களை வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

• ஜெய்ப்பூரில் திறந்த பேருந்தில் ஐசிசி டிராபியுடன் பிரதமர் மோடி மற்றும் இந்திய வீரர்கள் Road Show நடத்த திட்டமிட்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பையை இந்தியா வென்றிருந்தால் அதனை தங்களது தனிப்பட்ட வெற்றிபோல் கொண்டாட எவ்வளவு கீழ்நிலைக்கு வேண்டுமானாலும் பாஜக சென்றிருக்கும் என்று சுப்ரியா ஷிரினேட் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தகவலை ராஜஸ்தான் மாநில பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.