108 ஆம்புலன்ஸ் சேவை குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பு

Must read

மும்பை: மராட்டிய மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் பயன்பாட்டு அளவு, கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2018ம் ஆண்டில், 53% அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கூறப்படுவதாவது; கடந்த 2018ம் ஆண்டில் மட்டும், சாலை விபத்து, தாக்குதல், தீக்காயங்கள், மாரடைப்பு, தற்கொலை மற்றும் காயம் தொடர்பான காரணங்களுக்காக, மொத்தமாக 14,80,249 முறை 108 ஆம்புலன்ஸ் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

எங்களால் மிக அதிகமான அழைப்புகளுக்கு சேவைசெய்ய முடிந்துள்ளதால்தான், மக்கள் மத்தியில் எங்களைக் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என 108 ஆம்புலன்ஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேவை தொடங்கப்பட்டதிலிருந்து, இதுவரை 37,98,118 அழைப்புகளுக்கு பதிலளிக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த 2018ம் ஆண்டில், 14.8 லட்சம் அழைப்புகளுக்கும், 2017ம் ஆண்டில் 7.9 லட்சம் அழைப்புகளுக்கும், 2016ம் ஆண்டில் 6.84 லட்சம் அழைப்புகளுக்கும், 2015ம் ஆண்டில் 4 லட்சத்திற்கு மேற்பட்ட அழைப்புகளுக்கும், 2014ம் ஆண்டில் 1.92 லட்சம் அழைப்புகளுக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவை சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி

More articles

Latest article