ஸ்வீடன்:
2016ம் ஆண்டிற்கான  நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்று  இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூன்று அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது.
nobel-winners-physics
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தற்போது தொடங்கி உள்ளது. நேற்று மருத்துவத்திற்கான  நோபல் பரிசு  அறிவிக்கப்பட்டது. இன்று இயற்பியலுக்கான பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
நேற்று  மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு  ஜப்பான் நாட்டின் யோஷினேரி ஓஷிமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று  அமெரிக்காவின் டேவிட் தவுலெஸ், டன்கன் ஹல்டேல் மற்றும் மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. 
நாளை  வேதியியலுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்படுகிறது. மிக உயரிய பரிசாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசு 7-ம்தேதி அறிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 10-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. மலேரியா மற்றும் வெப்பமண்டல நோய்களுக்கு மேம்பட்ட சிகிச்சை முறைகளை கண்டுபிடித்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
nobel-prize