அமெரிக்க அதிபர் தேர்தல் – ரகசிய ஆவணங்களை வெளியிடுவோம்: விக்கிலீக்ஸ் அசாஞ்சே

Must read

 
வாஷிங்டன்:
மெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான முக்கியமான ரகசிய ஆவனங்களை வெளியிட இருப்பதாக விக்கி லீக்ஸ் இணையதளம் அறிவித்து உள்ளது.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ பற்றிய ரகசிய தகவல்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் விக்கிலீக்ஸ் இணைய தள நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே.

இவர்,  தற்போது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான தகவல்களை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் .விக்கிலீக்ஸ்(WikiLeaks) என்ற இணையத்தளம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவாக உள்ளதை தொடர்ந்து விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே  அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் இருந்து காணொளி காட்சி வழியாக அசாஞ்சே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பாக முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை வெளியிட முடிவு செய்துள்ளோம்.
மேலும், இந்த தகவல்கள் வாக்களிக்கும் நாளான நவம்பர் 8-ம் தேதிக்கு முன்னதாகவே வெளியிடப்படும்’ என அசாஞ்சே தெரிவித்துள்ளார்.

More articles

Latest article