நெட்டிசன்
பாக்யராசன் சேதுராமலிங்கம் (Packiarajan Sethuramalingam )  அவர்களின் முகநூல் பதிவு:

கச்சத்தீவு
கச்சத்தீவு

ச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை, மிக அவரசரமாக 1974 ஜுன் 29-ந்தேதி சென்னை கோட்டையில் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி கூட்டினார். அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்துகொண்டன.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது: “இந்தியாவுக்குச் சொந்தமானது என்று நாம் கருதுவதும், தமிழ்நாட்டுக்கு நெருக்கமான உரிமை கொண்டதுமான கச்சத்தீவு பிரச்சினையில் மத்திய அரசு எடுத்துள்ள முடிவை இந்தக் கூட்டம் விவாதித்தது. தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு மத்திய அரசு இதனை மறு பரிசீலனை செய்து கச்சத்தீவின் மீது இந்தியாவுக்கு அரசு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைத்து தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறது.”
இலங்கை இனப்படுகொலை
இலங்கை இனப்படுகொலை

அதற்கு பின்னும் எந்த மாற்றமும் இல்லை.. கச்சதீவு பறிபோய் 500க்கும் மேற்பட்ட உயிர்களும் எண்ணற்ற இழப்பும் ஏற்பட்டது தான் மிச்சம்…
தமிழீழத்தில் நடைபெற்ற தமிழின படுகொலையை எதிர்த்து அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி 2008 அக்டோபர் 14ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டினார்.
 
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது: “இரண்டு வாரங்களுக்குள் இந்திய அரசாங்கம் இலங்கையில் போரை நிறுத்த முன்வராவிட்டால் தேசிய பாராளுமன்றத்தில் இருக்கும் மாநில உறுப்பினர்கள் அனைவரும் மொத்தமாக இராஜிநாமா செய்துவிடுவர்”
கருணாநிதி
கருணாநிதி

அதற்கு பின்னும் எந்த மாற்றமும் இல்லை.. ராஜினாமாவும் ஒரு நாடகம் என்று தெரிந்தது தான் மிச்சம்.. இந்திய அரசின் துணையோடு சிங்கள பௌத்த இனவெறி ராணுவம் கோரத்தாண்டவம் ஆடி மே மாதத்தில் மொத்த இனத்தையும் அழித்து முடித்தது..
 
# ஆட்சியில் இருந்து போட்ட அனைத்துக்கட்சி கூட்டமே இந்த லட்சணம் என்றால் எதிர்கட்சியாக இருந்துகொண்டு போடும் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் என்ன தந்துவிட போகிறது.. தந்தையும் தனயனும் இன்னும் பலி எடுக்காமல் இருந்தால் போதும்.