குழந்தைகளை பலாத்காரம் செய்வோருக்கு புதுவித தண்டனை

Must read

நெட்டிசன் – ரஃபீக் சுலைமான் (Rafeeq Sulaiman) அவர்களின் முகநூல் பதிவு:

child_abuse12

பெண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் கயவர்களுக்கு ஒரு புதுவித தண்டனையை அளிக்க இந்தோனேசியா முடிவெடுத்துள்ளது.
பெண் குழந்தைகளை பலாத்காரம் செய்பவர்களை இதுவரை 15 ஆண்டுகள் சிறையில் அடைத்து தண்டித்தனர். ஆனால், போலந்து மற்றும் அமெரிக்காவின் சில மாகாணங்களில் உள்ளது போல, உடலில் பெண்மைத் தன்மை ஏற்படுத்தும் ஹார்மோன்களைச் செலுத்தி (வேதியல் மாற்றங்களை ஏற்படுத்தி) அவர்களை வாழ்நாள் முழுதும் ஆண்மையற்றவர்களாக மாற்றுதல் எனும் தண்டனைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதிபரின் ஒப்புதலுக்குப் பிறகு உடனடியாக இந்தச் சட்டம் அமலுக்கு வருமாம்.
“குற்றம் புரிபவர்கள் தண்டனைக்குப் பயந்து இதுபோன்ற குற்றங்களிலிருந்து விடுபடுவார்கள்” என்று அந்நாட்டின் அட்டார்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article