கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது குறித்து தேசத்துக்கு அறிவுறுத்தவே வெள்ளை அறிக்கை! ராகுல்காந்தி…

Must read

டெல்லி: கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது குறித்து தேசத்துக்கு அறிவுறுத்தவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2வதுஅலையின் கடுமையான தாக்கத்தால் மருத்துவ வசதியின்றி உயிரிழப்புகள் ஏராளமான நிகழ்ந்துள்ளது. இதற்கு மோடி அரசின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், கொரோனாவில் பாதிப்பு பெருமளவில் குறைந்த போதும் மரண எண்ணிக்கை குறையாமல் உள்ளது. ஆயினும் மரண எண்ணிக்கை விவரங்களை மத்திய அரசு குறைத்துக் காட்டுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில்,   காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை 11 மணிக்கு காணொளி காட்டிச செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார். அப்போது கொரோனா நிலவரம் குறித்து,  காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ள  வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றார்.

அதன்படி இன்று காலை 11 மணி அளவில் செய்தியளார்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா மூன்றாவது அலை கட்டாயம் வரும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளர். அதை எதிர்கொள்ள  அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.

கொரோனா 2வது அலையின்போது, மத்தியஅரசு சரியான நடவடிக்கை எடுத்திருந்தால், தொற்றின் தாக்கத்தால் இறந்த 90% மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இதற்கு மிகப்பெரிய காரணம் அந்த நேரத்தில் ஆக்ஸிஜன் இல்லாததுதான். நாட்டில் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை இல்லை என பிரதமர் கண்ணீர் வடிக்கிறார். ஆனால்,  பிரதமரின் கண்ணீர் மக்களின் உயிரைக் காப்பாற்றவில்லை.

ஏற்கனவே கொரோனா முதல்அலை மற்றும் 2வது அலையின் தாக்கம் பேரழிவை தரும் என்பது குறித்தும்,   அதன் பின்னணியில் உள்ள காரணங்களையும் மத்தியஅரசுக்கு  சுட்டிக்காட்ட முயற்சித்தோம். ஆனால், அவர்கள் எங்களது கருத்துக்களை செவிமடுக்கவில்லை.

ஆனால், கொரோனா மூன்றாவது அலை கட்டாயம் வரும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளர். அதை எதிர்கொள்ள  அனைவரும் தயாராக இருக்க வேண்டும். மூன்றாவது அலைக்குப் பிறகும் மேலும்  அலைகள் ஏற்படக்கூடும், வைரஸ் உருமாறும் போது மேலும் அலைகள் பரவும் வாய்ப்பு உள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுஉள்ளது,  இந்த வெள்ளை ஆய்வறிக்கையின் நோக்கம் அரசாங்கத்தை நோக்கி விரல் காட்டுவது அல்ல, ஆனால் நோய்த்தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ள நாடு தயார் செய்ய உதவும்  என்பதே.  மூன்றாவது அலை தாக்கும் என்பது முழு நாட்டிற்கும் தெரியும்.

கொரோனா பரவல் தடுப்புநடவடிக்கைகளில் கடந்த கால தவறுகளை மத்திய அரசு மீண்டும் செய்தால் கொரோனா பாதிப்பு மீண்டும் தொடரும். கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது குறித்து அரசுக்கு அறிவுறுத்தவே வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.

 

More articles

Latest article