காவிரி விவகாரம்: மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு 16ந்தேதிக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Must read

டில்லி:

ச்சநீதி மன்றத்தில் இன்று நடைபெற்ற காவிரி வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்ட அறிக்கையை மாநில அரசுகளுக்கு அனுப்ப உத்தரவிட்டும், அதுகுறித்து பதில் தெரிவிக்க  வழக்கை 16ந்தேதிக்கு உச்சநீதி மன்றம் மீண்டும் ஒத்தி வைத்தது.

காவிரி வழக்கில் ஏற்கனவே நடைபெற்ற  8ந்தேதி விசாரணையின்போது,  காவிரி  வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறை செயலாளர் தாக்கல் செயய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதி மன்றத்தில், மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் ஆஜராகி, காவிரி நிதி நீர் தொடர்பான வரைவு திட்ட அறிக்கை தாக்கல் செய்தார்.

அப்போது, உச்சநீதி மன்ற தீர்ப்புபடி,  காவிரி வாரியம், அல்லது ஆணையம் அல்லது குழு அமைக்க தயார் என்றும்,  காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் என்ன உத்தரவிடுகிறதோ அதனை செயல்படுத்த தயார் நீர்வளத்துறை செயலர் யுபி சிங் உச்சநீதிமன்றத்தில தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து, மத்திய அரசின  காவிரி வரைவு திட்ட அறிக்கை நகல்களை  தமிழ்நாடு, கர்நாடக, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.

வரைவு திட்டம் குறித்து பதில் அளிக்க உத்தரவிட்ட உச்சநீதி மன்றம் வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 16ந்தேதிக்கு மீண்டும் ஒத்தி வைத்தது.

More articles

Latest article