சிங்கப்பூர் : சிங்கப்பூரில், அதிகாரபூர்வ மொழியாக, தமிழ் மொழி நீடிக்கும். இதற்கு அரசு உறுதுணையாக இருக்கும்,” என்று அந்நாட்டு, வர்த்தக உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில், அதிகாரபூர்வ நான்கு மொழிகளில், தமிழ் மொழியும் ஒன்றாகும்.  பள்ளிகளில் தாய் மொழியாகவும், தமிழ் மொழி புழக்கத்தில் உள்ளது.

இது குறித்து, அந்நாட்டு வர்த்தக உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஈஸ்வரன் தெரிவித்ததாவது:

“தமிழ் மொழிக்கு  ஆதரவு என்பதில், சிங்கப்பூர் அரசு உறுதியாக இருக்கிறது.  இளைஞர்கள் அதிகளவில் தமிழ் மொழியை பயன்படுத்தி, அதை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவ வேண்டும்.  தமிழ் மொழி கலாசாரத்தை கொண்டாடுவதற்கு, ஊக்குவிப்பதற்கும் முயற்சி செய்ய வேண்டும். ‘ என்றார்,

அந்நாட்டு ரூபாய் நோட்டிலும்  தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.