Skip to content
  • Tue. Sep 22nd, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

50ஆண்டுகளில் காணாமல் போன நாலறை கோடி பெண்கள்! எங்கே தெரியுமா?

Jul 1, 2020
ஜெனிவா:
இந்தியாவில் 50ஆண்டுகளில்  நாலறை கோடி பெண்கள் காணாமல் போயிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. மேலும் 2050ம் ஆண்டில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் பெண்கள் காணாமல் போகும் நிகழ்ச்சிகள் அவ்வப்போது தெரிய வரும் நிலையில், கடந்த 50 ஆண்டுகளில் 4 கோடியே 58 லட்சம் பெண்கள் காணாமல் போயிருப்பதாக  ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், பிறந்த பிறகு பெண் குழந்தைகள் மற்றும்  கருவிலேயே சிதைக்கப்படும் சிசுக்களும் அடங்கும்.
இதுதொடர்பாக  ‘ஐ.நா. மக்கள்தொகை நிதியம்‘ சார்பில் உலக மக்கள்தொகை நிலவரம் குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி,
கடந்த 1970-ம் ஆண்டு நிலவரப்படி உலக அளவில்,  6 கோடியே 10 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளதாகவும், கடந்த  50 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை டபுளாக உயர்ந்துள்ளது.  இந்த ஆண்டு (2020) கணக்கிட்டின்படி, மொத்த  எண்ணிக்கை 14 கோடியே 26 லட்சமாக அதிகரித்து உள்ளது.
மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் 7 கோடியே 23 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் தொகை நிலவரத்தில் 2வது இடத்தில் உள்ள  இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 4 கோடியே 58 லட்சம் பெண்கள் காணாமல் போய் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு 2017-ம் ஆண்டுவரை, ஆண்டுக்கு 4 லட்சத்து 60 ஆயிரம் பெண் குழந்தைகள், பிறப்பிலேயே அழிக்கப்பட்டுள்ளனர். கருவிலேயே அழிக்கப்பட்டவர்கள் மூன்றில் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல நாடுகளில், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளையே அதிகம் விரும்புகின்றனர். பெண் குழந்தைகள் அழிக்கப்படுவதால், ஆண்-பெண் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது.  இதனால், குழந்தை திருமணங்கள் பெருக வாய்ப்பு இருப்பதாகவும் அச்சம் தெரிவித்து உள்ளது.
உலகம் முழுவதும் திருமணம் ஆகாத ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,  2050-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில், பெண் குழந்தைகளை விட  ஆண்கள் எண்ணிக்கை 10 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post navigation

வாகனங்களை ஓட்டும் தினங்களுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை செலுத்தும் வசதி அறிமுகம்
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமா?

Related Post

இந்தியா

கைது காரணங்களை எழுத்தில் தராவிட்டால் போலீஸ் அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை: உச்சநீதிமன்றம்

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer