டெல்லி, சாந்தினி சௌக் பகுதியில் இருந்த குடிசைப் பகுதி 2023ல் அகற்றப்பட்டபோதும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து அங்கேயே வசித்து வருகின்றனர்.

2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2025 டெல்லி சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களித்து உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் (SIR) பணியின்போது, ​​அவர்கள் தங்கள் விவரப் படிவங்களைச் சமர்ப்பித்து BLO-விடம் ஒப்புகை சீட்டு பெற்றுள்ளனர்.

ஆனால், வீடு வீடாகச் சென்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது ஒரே ஒரு படிவம் மட்டுமே பெறப்பட்டதாக, BLO மற்றும் BLA கூட்டத்தின் குறிப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் 909 வாக்காளர்களைக் கொண்ட சாந்தினி சௌக் தொகுதியின் 33-வது வாக்குச்சாவடியில் தற்போது ஒருவர் மட்டுமே உள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது.

வீடற்றவர்கள் கூட வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ளும் உரிமையை இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி கையேடு அங்கீகரித்துள்ளது.

இந்நிலையில் மின்சாரம் அல்லது குடிநீர் கட்டண ரசீதுகள் அல்லது நில உரிமைக்கான சான்றுகளைச் சமர்ப்பிக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற முடியாது என்று அதிகாரிகள் குடியிருப்பாளர்களிடம் கூறிவருகின்றனர்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் டெல்லி தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.