டில்லி :

டில்லியில் பிரதமர் மோடியை, நாடாளுமன்ற மேலவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.,யுமான தம்பிதுரை நேரில் சந்தித்தார்.

மூன்று மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெற்ற வெற்றிக்காக மோடிக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

“உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்த பிரமரை சந்திக்க அ.திமு.க. எம்.பிக்கள் முயற்சித்தால், பிரதமர் நேரம் ஒதுக்குவதில்லை. இந்த நிலையில் பாஜகவின் வெற்றிக்காக தம்பிதுரை வாழ்த்துவதும், அதற்காக பிரதமர் நேரம் ஒதுக்கியதும் தமிழக விவசாயிகள் மீது பிரதமரும், தமிழகத்தை ஆளும் அதிமுகவினரும் எந்த அளவுக்கு அக்கறை வைத்துள்ளனர் என்பது தெரிகிறது” என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.