இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் 19 ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதனை அடுத்து ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68 படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

தந்தை மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க உள்ள இந்த படத்தின் மற்ற அப்டேட்டுகள் லியோ படம் வெளியான பின்பு வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.