ஜூன் 22 ஆம் தேதி தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் நடிகர் விஜய். ரசிகர்கள் அனைவரும் அவரின் பிறந்தநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் பிறந்தநாள் தினத்தில் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 66’ தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கவுள்ளார், தில் ராஜு தயாரிக்க உள்ளதார்.

மேலும், விஜய் தற்போது நடித்து வரும், ‘தளபதி 65’ படத்தின் போஸ்டர் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.

இயக்குனர் நெல்சன் பிறந்தநாள் 21ஆம் தேதியும் படத்தின் நாயகன் விஜயின் பிறந்தநாள் 22ஆம் தேதியும் வருவதை அடுத்து , படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.