முகக் கவசம் அணியாத தாய்லாந்து பிரதமருக்கு அபராதம்

Must read

பாங்காக்

கொரோனா விதிகளை மீறி முகக் கவசம் அணியாத தாய்லாந்து பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உலகெங்கும் தீவிரம் அடைந்துள்ள இந்நிலையில் தாய்லாந்திலும் அந்த பாதிப்பு காணப்படுகிறது.   எனவே நாட்டில் கொரோனா விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.  அதன்படி தாய்லாந்தில் முகக் கவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  முகக் கவசம் அணியவில்லை எனில் அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாங்காக் நகரில் நேற்று முன் தினம் ஒரு கூட்டம் நடந்தது.  அதில் பங்கேற்ற தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா முகக் கவசம் அணியவில்லை.  இதையொட்டி பாங்காக் மாகாண ஆளுநர் அஸ்வின் குமார் முவாங்க் பிரதமருக்கு  190 டாலர்கள் அபராதம் விதித்துள்ளார்.   இதை ஆளுநர் தனது அதிகாரப் பூர்வ முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார்.

அந்த பதிவில் அஸ்வின், “சிட்டி ஹாலில் நடந்த  கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டுள்ளார்.   அவருக்கு வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பது தெரியும்.  ஆயினும் அவர் முகக் கவசம் அணியாமல் வந்துள்ளார்.  பிரதமராக இருந்தாலும் இது குற்றமே ஆகும்.  அதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” எனப் பதிந்துள்ளார்.

 

More articles

Latest article