சென்னை,

சிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வு (TET) மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேர்வு எழுதும் ஆசிரியர்களின் பள்ளி மற்றும் கல்லூரி மதிப்பெண்கள் அடிப்படையில் வெயிட்டேஜ் முறையில் பணி நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. மேலும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரியும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் தள்ளுபடியானது.

இநநிலையில், ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட வெயிட்டேஜ் முறையே தொடரும் என  தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வருகிறார்கள். ஆனால், அனைவருக்கும் பணியிடம் கொடுக்க முடியாத நிலையில், பள்ளி, கல்லூரி மற்றும் ஆசிரியர் பட்டயப் படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி, டெட் தேர்வு  மதிப்பெண்களில் 60 சதவிகிதம் மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டு, மீதமுள்ள 40 சதவிகித மதிப்பெண்களுக்கு,  வெயிட்டேஜ் மதிப்பெண்களிலிருந்து கணக்கிடப்பட்டு வருகிறது.

அதாவது, டெட் தேர்வில் எடுக்கப்பட்ட 60 மதிப்பெண்களுடன், 12 -ம் வகுப்பிலிருந்து 15 மதிப்பெண்களும், டிப்ளமோ விலிருந்து 25 மதிப்பெண்களும் சேர்த்து, வெயிட்டேஜ் கணக்கிடப்படும்.

இந்த முறையே இனிமேலும் செயல்படுத்தப்படுத்த தமிழக அரசு  முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.