ஜம்மு: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பள்ளியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் நிலவி வருகிறது.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள டிராப்கம் என்ற பகுதியில் உள்ள பள்ளியில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த பள்ளியானது, தேர்வு மையமாக செயல்பட்டு வருகிறது.

தீவிரவாதிகள் திடீரென தேர்வு மையத்தின் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தீவிரவாதிகள் மீது ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தவதால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. தாக்குதலால் தேர்வு மையத்தில் சிக்கி 5 மாணவர்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் கூடுதல் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்வு மையத்தின் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.