கடுக்காய் மருத்துவ பயன்கள்

(Terminalia Chebula Dried Fruit).

காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.

காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்)  சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்து. எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்

அலோபதி

செல்களின் வளர்சிதை மாற்ற சீரமைப்பு (antioxidant), கிருமி நாசினி ( antimicrobial), நீரிழிவு நோய் கட்டுப்படுத்த, வராமல் தடுக்க (antidiabetic), கல்லீரல் பாதுகாப்பு( hepatoprotective),  வலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்துதல் (anti-inflammatory), மரபணு சிதைத்தலை தடுக்க (antimutagenic),  புற்று நோயை தடுக்க (antiproliferative),  கதிர் வீச்சில் இருந்து பாதுகாக்க (radioprotective), இதயத்தினை பலப்படுத்த (cardioprotective), எலும்பு வீக்கங்களை குணப்படுத்த (ம) பலப்படுத்த (antiarthritic), ( பற்களை சொத்தையாக்காமல் பாதுக்காக்க (anticaries), இரைப்பை குடல் ,தொற்றுக்களை குணப்படுத்து  ஜீரணத்தை ஒழுங்கப்படுத்த(gastrointestinal motility), உள் மற்றும் வெளி  உடல் காயங்களை குணப்படுத்த ( wound healing activity) என பல வகைகளில் பயன்படுகிறது
கடுக்காயில் இருக்கும் சத்துப்பொருள்கள் ( ,

நார்சத்து, விட்டமின் சி, இ, அமினோ அமிலங்கள், நொதிகள், உடல் வளர்ச்சிதை மாற்றத்திற்கத் தேவையான மூலக்கூறுகள், செல்களின் வளர்ச்சியை தூண்டும் மற்றும் ஒழுங்குப்படுத்தும் நொதிகள் போன்றவை உள்ளன

சித்த மருத்துவம்

கடுக்காயுந் தாயுங் கருதிலொன்றென் றாலுங்
கடுக்காயத் தாய்க்கதிகங் காணீ-கடுக்காய்கோ
யோட்டி யுடற்றேற்று முற்றவன்னை யோசுவைக
ரூட்டியுடற் றேற்று முவந்து.
குணம்:-(இ-ள்.)

பாடல் விளக்கம்

கடுக்காயும் தாயும் ஒன்றென
நினைத்திருந்தால் தாயைப் பார்க்கிலும் கடுக்காய் பெரிது
ஏனெனில், கடுக்காய் பிணிகளை நீக்கி சரீரத்தை நிலையாய் வைக்கும்.
தாயானவள் அறுசுவை உணவு ஊட்டி வளர்ப்பாள், உடலை
பிணிகளை நீக்கினாலல்லவோ உணவு பயன்பாடு உடல் தேறும் என்னும் வகை தெரியாமல் உணவை மாத்திரம் ஊட்டும் தன்மையுடையவளான தாயினும் கடுக்காய் சிறந்தது எனக் கூறினார்.

(வேறு)

தாடை கழுத்தக்கி தாலு குறியிவிடப்
பீடை சிலிபதமுற் பேதிமுட-மாடையெட்டாத்
தூலமிடி புண்வாத சோணிகா மாலையிரண்
டாலமிடி போம்வரிக்கா யால்.
-சித்தர் பாடல்

பயன்பாடு

மருந்துகளின் ராஜா என்றழைக்படுவது கடுக்காய்தான், அதுமட்டுமல்ல உலகிலயே பெரியவள் தாய் என்போம், ஆனால் தாயை விட பெரிது கடுக்காய் என்று சித்தர்கள் கூறுகிறார்கள். மேலும் சித்த மருத்துவத்தில் காய கல்ப மூலிகையில் சிறந்த கற்பமாக விளங்குவதும், முதன்மையானதும் கடுக்காயே ஆகும்.

அனைத்து பிணிகளில் இருந்தும் , நோய்கள் வராமல் தடுப்பதற்கும், நீண்ட நாள் உயிர் வாழ்வதற்கும் கடுக்காயே சிறந்தது என்று சித்தர்கள் கூறுகின்றனர்.

உண்ணும் முறை

கடுக்காயை தோல் நீக்கி சுத்தி செய்து அரை தேக்கரண்டி வீதம் இரவில் வெந்நீருடன்  தொடர்ச்சியாக உண்டு உடல் காயகல்பமாக மாறும்.

எட்டு வகை குண்ம நோய்கள், மந்த வாதம்,  வாந்தி, மூலம் , மலச்சிக்கல் , புற்று நோய், கிருமி நாசினி, இருமல், குடல் எரிவு, வயிற்று பொருமல், குடல் புழுக்கள், தலை சுற்றல்,  குடல் வீக்கம்குடலில் உள்ள ரணம் போன்றவை குணமாகவும்,   ஆண் மலடு, பெண் மலடு நீங்குதல் மற்றும் தாது பலப்படுத்துதல், தாது விருத்தி, தேக புஷ்டியாகவும், பல் நோய் வராமல் தடுக்க பல்பொடியாகவும், முக அழகுக்கு மேற்பூச்சாகவும், குளிக்கவும் கடுக்காயை பயன்படுத்தலாம்

மேலும் திரிபலா என்ற நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் சம அளவு கொண்டு 48 நாட்கள் உண்டு வரலாம்,

பிற பயன்

கடுக்காயை நம் முன்னோர்கள் சுண்ணாம்பில் கலந்து கட்டிடம் கட்ட பயன்படுத்தியுள்ளார்கள்

மருத்துவர் பாலாஜி கனகசபை
அரசு மருத்துவர்
9942922002