தான்றிக்காய்.
(Terminalia Belerica).

அலோபதி

தான்றிக்காயில் செல்களின் வளர்சிதை மாற்ற சீரமைப்பு (antioxidant), வலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்துதல் (anti-inflammatory) மற்றும் நார்சத்து உள்ளது

பயன்

கிருமி நாசினி ( antimicrobial) இருப்பதால் காயங்களுக்கு மேற்பூச்சாகவும்,தோல்களில் எந்த நோய் வராமலும் பாதுகாக்கவும் பயன்படுத்துகிறார்கள்

தலை முடி (Hair Rejuventationg) புத்துணர்ச்சியுடன் வளர, மெலிந்த முடியை நன்கு வளரச்செய்யவும் முடி உதிர்த்தலை தடுக்கவும் , பயன்படுகிறது

குரல் கரகரப்புக்கு மருந்தாகவும், குரல் வளத்தினை பெருக்கவும் (Hoarseness of voice) , ஆஸ்துமா மற்றும்  இரத்தத்துடன் கலந்து வரும் சளி, சாதாரண சளி இருமலுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

கொட்டையின் சதை பகுதி  வலி மற்றும் வீக்கத்தை குணப்படுத்துதல் (anti-inflammatory) ஆகவும் , Rheumatismத்திற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது

வயிற்றில் உள்ள புழுக்களை  (Worm Infestations) நீக்கவும் பயன்படுகிறது
கெட்ட கொழுப்பை சரி செய்யவும் உதவுகிறது

சித்த மருத்துவம்

சிலந்திவிடங் காமியப்புண் சீழான மேகங்
கலந்து வரும் வாத பித்த ங் கா ளோ-டலர்ந்துடலி
லூன்றிக்காய் வெப்ப முதிரபித் துங்கரக்குந்
தான்றிக்காய் கையிலெடுத் தால்
–சித்தர் பாடல்

சித்த மருத்துவ பயன்கள்

வாந்தி, அதிகமான நாவறட்சி, பசி இன்மையை சரி செய்கிறது
அதிகமான வயிற்றுப்போக்கை குணப்படுத்துகிறது
மூலம் மற்றும் குடல்புழுக்கள், வயிற்று ப்பொறுமல் போன்றவற்றை குணப்படுத்துகிறது
கண் நோய்களை ( கண்ணில் வீக்கம், கண்ணின்  ஔி யை மேம்படுத்துகிறது
வாயில் துர்நாற்றத்தைப் போக்குகிறது
உடலில் இருக்கும் சிலந்தி விசம், சீதபேதி, ரத்த மூலம், ஆண்குறியில் கிரந்தி(புண்) , திரிதோஷ சுரம், இரத்த பித்தம், வாத பித்தம், உடற்சூடு, காதுநோய்களை குணமாக்கும், ஆண்மையை பெருக்கும் மற்றும் சிறு நீர் எரிச்சலை குணப்படுத்தும்
மலமிலக்கியாகவும் செயல்படும்

உடலுக்கு அழகும், ஒளியும் உண்டாக்கும் என்பது சித்தர் வாக்கு

சாப்பிடும் முறை

தான்றிக்காயை திரிபலா சூரணம் என்ற பெயரில் வழங்கப்படும்  (நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ) கலவையை மூன்றிலிருந்து ஆறு கிராம் வரை வெந்நீரில்  இரவில் எடுத்துக்கொள்ளலாம்.
தொடர்ந்து 48 நாட்கள் எடுத்துக்கொண்டால் உடல் காய கல்பமாகும்

மருத்துவர் பாலாஜி கனகசபை, MBBS, PhD
அரசு மருத்துவர். கல்லாவி

99429-22002