மதுரை:

ன்னியாகுமரி கடற்கரை பகுதிகளில் தற்காலிக கடைகள் வைக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்து உள்ளது.

சபரிமலை சீசனின்போது, ஏராளமானோர் கன்னியாகுமாரி வருவதால், கடற்கரை பகுதிகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இதனால் கடல் மாசுப்படுவதாக கூறி பொதுநல வழக்க தொடரப்பட்டது. அந்த மனுவில் அரசு, கன்னியாகுமரி காந்திமண்டபம் முதல் சூரிய அஸ்தமனத்தை பார்வையிடும் இடம் வரை சபரிமலை சீசன் காலத்தை முன்னிட்டு கடற்கரை ஓரம் தற்காலிக கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த தற்காலிக கடைகளால் உருவாகும் பிளாஸ்டிக் குப்பைகள் அப்படியே கடலில் கலந்து சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன. எனவே இந்த தற்காலிக கடைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என கோரப்பட்டிருந்தது.

இந்த மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே நிபந்தனைகளுடன் அரசு அனுமதி வழங்கி உள்ளதாக கூறியது.

அரசு தரப்பின் வேண்டுகோளை ஏற்ற நீதிமன்றம், இந்த ஆண்டு மட்டும் கடை வைக்கலாம் என்று அனுமதி வழங்கியதுடன்,   அடுத்த ஆண்டு முதல் சபரிமலை சீசனை ஒட்டி குமரி மாவட்ட கடற்கரையோரம் தற்காலிக கடைகளை நடத்த தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.