சென்னை:
மிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40,000 கோயில்கள் திறக்கப்படும் என தமிழகஅரசு அறிவித்து  உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் 24ந்தேதி  முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கோவில்கள் உள்பட அனைத்து வகையான நடவடிக்கைகளும் முடங்கின. தற்போது, ஊரடங்கில் பல்வேறு  தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தொழிற்நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், போக்குவரத்து தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கோவில்கள் உள்பட அனைத்து மத வழிப்பாட்டுத்தலங்களையும் திறக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதற்கு பதில் அளித்த தமிழகஅரசு, கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்பதால், வழிப்பாட்டுத் தலங்கள் திறப்பதற்கான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், தற்போது வழிப்பாட்டுத்தலங்களை திறக்க தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுமார் 40ஆயிரம் கோவில்கள் உள்பட அனைத்து மத வழிப்பாட்டுத்தலங்களும் ஜூன் 1ந்தேதி முதல் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சமூக இடைவெளி, முகக்கவசம் உள்பட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.