ஹைதராபாத்:

இயக்குனர்களுடன் நிர்வாணமாக வீடியோ சாட் செய்யச் செய்தேன் என பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி அதிரச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.

தெலுங்கு நடிகையான ஸ்ரீ ரெட்டி சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் உள்ள மூவி ஆர்ட்டிஸ்ட் அசோசியேசன் எதிரில் நடிகை ஸ்ரீ ரெட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்தி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

ஒரு சில தெலுங்கு சினிமாக்களில் நடித்துள்ள ஸ்ரீ ரெட்டி, செக்ஸ் காட்சிகளில் நடித்து பிரபலமானவர்.

அவர், “தெலுங்கு திரை உலகில் நடிகைகள் ஜாதி பிரச்சனை, பாலியல் தொல்லை ஆகியவற்றை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.  மேலும் கதாநாயகர்கள் தயாரிப்பாளர்களுக்காக புரோக்கர்களாக செயல்படுகின்றனர். தெலுங்கு நடிகைகளில் 90 சதவிகிதம் பேர் பல்வேறு தொல்லைகளை சந்திக்கின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் பெயர்களை வெளியிடுவேன் என்பதால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

மேலும் எனக்கு மூவி ஆர்டிஸ்ட் அசோசியேசன் உறுப்பினருக்கான அடையாள அட்டையை கூட கொடுக்க மறுக்கின்றனர்” என்று புகார் தெரிவித்து வந்தார்.

தனது குற்றச்சாட்டுக்களை வலியுறுத்திக்கூற, அரை நிர்வாணமாக பேட்டி அளித்ததாக தெரிவித்தார்.

தவிர,  ஸ்ரீ லீக்ஸ் பெயரில் லீலை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர், “செக்ஸ் வைத்துக் கொள்ள ஸ்டுடியோக்களை சிவப்பு விளக்கு பகுதி போன்று பயன்படுத்துகின்றனர்.

வட நாட்டு நடிகைகள் இதை அட்ஜஸ்ட் செய்து கொள்வதால் தெலுங்கு நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை . இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்னை நிர்வாணமாக வீடியோ சாட் செய்யச் சொன்னார்கள், புகைப்படம் அனுப்பச் சொன்னார்கள். நானும் செய்தேன், அதற்கு ஆதாரம் உள்ளது.’ என்று தெரிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார்.