சென்னை

ணப் பிரச்னை காரணமாக விஜய் ஆண்டனி நடித்த காளி திரைப்படம் வெளியாக விதிக்கப் பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

பிரபல இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் காளி.   இதை மு க ஸ்டாலின் மருமகள் கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார்.    இதற்கு முன்பு விஜய் ஆண்டனி நடித்து வெளியான படமான அண்ணாத்துரை தோல்வியை தழுவியது.   அந்தப் படத்தை வாங்கிய அலெக்சாண்டர் என்பவர் தனக்கு ரூ. 4.73 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அதை திரும்பத் தராமல் காளி படத்தை திரையிடக் கூடாது எனவும் விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி ஃபாத்திமா ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் காளி திரைப்படத்தை வெளியிட தடை விதித்தது.   மேலும் இன்றைக்குள் ரூ.4.73 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.    இதை எதிர்த்து விஜய் ஆண்டனி தரப்பு மேல் முறையீடு செய்தது.    நீதிமன்றம் காளி திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியும் விஜய் ஆண்டனி தர வேண்டிய பாக்கியில் ரூ.2 கோடிக்கான உத்திரவாதத்தை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.