சென்னை

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் அறிவித்ததில் இருந்தே பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது.  ரஜினி மக்கள் மன்றத்துக்கு பல மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.   மீதமுள்ள நிர்வாகிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் முகநூல் மற்றும் டிவிட்டரில் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.    இந்த தளங்களின் மூலம் உறுப்பினர் சேர்க்கையும் நடந்து வருகிறது.

தற்போது ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் யூ டியூப் சேனல் ஒன்று தொடங்கப் பட்டுள்ளது.   ரஜினிகாந்தின் அதிகார பூர்வ வீடியோக்கல் இனி இந்த சேனலில் வெளியகும் என கூறப்பட்டுள்ளது.   ஏற்கனவே அவர் பேசிய வீடியோக்களும் மற்ற சேனல்களில் வந்த ரஜினிகாந்த் குறித்த வீடியோக்களும் தற்போது தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.