டில்லி

ந்தியாவில் தொலைபேசி உபயோகிப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக டிராய் தெரிவிக்கிறது.

இந்தியாவில் தொலைபேசி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களைக் கவர பல புதிய திட்டங்களை வெளியிட்டு வருகின்றன.   மற்ற நிறுவனங்களில் உள்ள சந்தாதாரருக்கு அழைப்பு விடுக்கும் ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் சலுகைககளை அறிவித்து அதே எண்ணுடன் நிறுவனத்தை மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கிறது.   இந்நிலையில்  டிராய் எனப்படும் தொலைபேசி கட்டுப்பாட்டு நிறுவனம் சமீபத்தில் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த தகவலின் படி “இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் 121,06,71,000 ஆக இருந்த மொத்த வாடிக்கையாளர்கள்,  அக்டோபர் மாத இறுதியில் 120,02,72,000 ஆக குறைந்துள்ளது.   இது தவிர பலர் தங்களது மொபைல் நிறுவனங்களை மாற்றியுள்ளனர்.  புதிய இணைப்பு அளிப்பதில் ரிலையன்சின் ஜியோ முதல் இடத்திலும் ஏர்டெல் இரண்டாம் இடத்திலும், வோடோஃபோன், ஐடியா, பி எஸ் என் எல் ஆகியவை அடுத்த இடங்களிலும் உள்ளன.

இந்த குறைவுக்கு பெரும் காரணம் தற்போது யாரும் லேண்ட் லைன் தொலைபேசிகளை உபயோகிக்காததே ஆகும்.    அதே போல லேண்ட்லைன் பிராட் பாண்ட் சேவை எண்ணிக்கை குறைந்து மொபைல் பிராட் பாண்ட் சேவை உபயோகிப்பாளர்கள் அதிகரித்துள்ளனர். ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.