தராபாத்

 தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 7 ஆம் தேதி, தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார். ரேவந்த் ரெட்டிக்குத் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து 20 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.

ஏற்கனவே மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ரேவந்த் ரெட்டி தற்போது அதை ராஜினாமா செய்துள்ளார். அவர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.