தராபாத்

ன்று முதல் தெலுங்கானாவில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்குப் பேருந்து பயணம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் 65 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அங்கு முதல் முறையாகக் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. நேற்று முன்தினம் தெலுங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றார்.

தெலுங்கானாவில் அனைத்து வயது பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் இலவச பேருந்து பயணத்தைத் தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகிறது.

அதாவது தெலுங்கானா மாநில சாலை போக்குவரத்துக் கழகத்தின் கீழ் மாநில எல்லைகளுக்குள்  இயக்கப்படும் பல்லே வெலுகு மற்றும் விரைவு பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாகப் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் அனைத்து பெண்களும், மூன்றாம் பாலினத்தவரும் வயது வித்தியாசம் இன்றி,  பயன் பெறலாம். பெண்கள் தங்களுடைய வசிப்பிட முகவரியை உறுதிப்படுத்தும் வகையிலான அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ‘ஜீரோ டிக்கெட்’ வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.