ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார்களை தயாரிப்பதற்காக ரூ. 8350 கோடியில் தொழிற்சாலை அமைக்க இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த நவீன கார் தொழிற்சாலை தமிழ்நாட்டில் அமையவுள்ளதாகக் கூறப்படுகிறது.

2008ம் ஆண்டு JLR ஐ வாங்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மார்ச் மாதம் தமிழ்நாட்டில் ஒரு புதிய ஆலையில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது, ஆனால் அங்கு என்ன தயாரிக்கப்படும் என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்க இருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ள நிலையில் இந்த தொழிற்சாலையில் எந்த JLR மாடல்கள் உருவாக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.