சென்னை: சென்னை ரயிலில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி தொடர்பாக, நெல்லை மாவட்ட பாஜக வேட்பாளர்  நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்மீது  நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம்,  விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி, கடந்த 6-ஆம் தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பணம் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.  அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  அந்தப் பணம் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. ஆனால், . இதை நயினாா் நாகேந்திரன் மறுத்தாா்.

இதையடுத்து தாம்பரம் போலீஸாா் நடத்திய தொடா் விசாரணையில், அந்த ரூ. 4 கோடி பணம் நயினாா் நாகேந்திரனுடையது என முதல்கட்ட தகவல் வெளியாகியது. இது குறித்து தாம்பரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாஜக வேட்பாளர், நயினாா் நாகேந்திரனை  தகுதி நீக்கம் செய்யக் கோரி நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளா் ராகவன் அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையின்போது,  தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, விசாரணையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.