சென்னை:

தேர்தலையொட்டி ஏப்ரல் 16,17 மற்றும் வாக்குப் பதிவு நடக்கும் ஏப்ரல் 18-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 23 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட தமிழக அரசு உத்தவிட்டுள்ளது.


தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மக்களவைக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடக்கிறது. மே 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தேர்தலையொட்டி 4 நாட்களிலும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

உள்நாட்டு, வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது. எந்த வகை மதுக்களையும் விற்கவோ, எடுத்துச் செல்லவோ கூடாது.

ஏப்ரல் 16,17 மற்றும் வாக்குப் பதிவு நடக்கும் ஏப்ரல் 18-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடக்கும் மே 23 ஆகிய தேதிகளில்மதுபானங்களை விற்பதை தடுக்கவும், சட்டவிரோத விற்பனை, பதுக்கி வைப்பதை தடுக்கவும் தமிழக டிஜிபி, கூடுதல் டிஜிபி, மாவட்ட எஸ்பிக்கள், ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.