டில்லி:

பெயர் மாற்றம் செய்யாமல் செயல்பட்டு வந்த  மதுபானக் கடைகளை உடனே மூட சென்னை உயர்நீதி மன்றம் கடந்த மாதம் 28ந்தேதி தீர்ப்பு கூறிய நிலையில், அதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகைமாற்றம் செய்து அது தொடர்பாக முறையான அறிவிப்பை வெளியிடாமல் டாஸ்மாக் கடைகள் திறந்திருந்தால் அதை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் சுமார் 5 ஆயிரம் கோடிக்கு மேல் வருமான இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசு கூறியுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது