சென்னை:

ச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. அந்த கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை அருகிலுள்ள கிராமப்பகுதியில் தொடங்க அரசு முயற்சித்து வருகிறது.

இதை எதிர்த்து பல இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறக்கக்கூடாது என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்-ச்கு  பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதததை பாமக வழக்கறிஞர் பாலு நேரில் கொடுத்தார்.

அதில், தேசியநெடுஞ்சாலைகளையும் மாநில நெடுஞ்சாலைகளையும் சாதாரண சாலைகளாக அறிவித்து (de-notification of highways) மீண்டும் சாராயக் கடைகளை திறக்க மத்திய பாஜக அரசும் மாநில அதிமுக அரசும் முயற்சிக்கின்றன. இந்த கூட்டுச்சதியை முறியடிக்க தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் இணைத்து போரிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

இன்று காலை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ஐ அவரது கிரின்வேஸ் இல்லத்தில் பாமகவை சேர்ந்த  வழக்கறிஞர் க.பாலு மற்றும் மு.ஜெயராமன் ஆகியோர் சந்தித்து ராமதாசின் எழுதியுள்ள   கடிதத்தை கொடுத்தனர்.