மதுரை: 
ஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி வழக்கை வரும் திங்கட்கிழமை பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம் லாவண்யா. இவர் திருக்காட்டுபலி சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். கிறிஸ்தவ கல்வி நிறுவனமான அந்த பள்ளி, லாவண்யாவை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற வற்புறுத்தியது. ஆனால், லாவண்யா அதை விரும்பவில்லை. இதனால் கோபமடைந்த பள்ளி நிர்வாகம், பொங்கல் விடுமுறையில் அவரை வீட்டுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. மேலும் பள்ளியின் கழிப்பறைகளைச் சுத்தம் செய்தல், பாத்திரங்களைக் கழுவுதல் மற்றும் சமையல் செய்தல் போன்ற வேலைகளைச் செய்ய வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மாணவி லாவண்யா அங்குள்ள தோட்டத்தில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். திடீரென லாவண்யா வாந்தி எடுத்து மயங்கியதைக் கண்ட பள்ளி நிர்வாகமும், வார்டனும், அவரை அருகிலுள்ள மருத்துவ விடுதிக்கு அழைத்துச் சென்று முதலுதவி செய்துள்ளனர். ஆனால், அவர் தொடர்ந்து வாந்தி எடுத்ததால், விடுதி வார்டன், அவரது பெற்றோரை அழைத்து, வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து, லாவண்யாவின் பெற்றோர்கள் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஆனால், லாவண்யா உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதால், உடனே  தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர் விஷம் குடித்தது தெரிய வந்தது. விஷம் குடித்ததாதல், அவரது  நுரையீரல் கிட்டத்தட்ட 85% பாதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் ஜனவரி 17 ஆம் தேதி லாவன்யாவின் உறவினர்கள்,  திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையம் முன்பு கூடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். விடுதி  வார்டன், லாவன்யாவை,  மதமாற்றச்சொல்லி வற்புறுத்தியதால் லாவன்யா பூச்சி கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி கூச்சலிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இதையறிந்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன்,  தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரிய வழக்கை வரும் திங்கட்கிழமை பட்டியலிட  உத்தரவு பிறப்பித்துள்ளார்.