சென்னை: அண்ணா பல்கலைக்கழக டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியாகிறது. tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முதுநிலை பொறியியல் படிப்பான எம்.பி.ஏ, எம்.சி.ஏ போன்ற படிப்புகளில் சேருவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் டான்செட் நுழைவு தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கை நடத்துகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான டான்செட் நுழைவு தேர்வுக்கு தேர்வு எழுதியவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்படுகிறது என   அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அன்படி  இன்று காலை 11 மணி முதல் ஹால் டிக்கெட்டுகளை tancet.annauniv.edu/tancet என்கிற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம். டான்செட் தேர்வு மார்ச் 25-ம் தேதி காலை, மதியம் என இரண்டு பிரிவுகளாக நடைபெறும். காலையில் 10 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும்.

இதேபோல் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.ப்ளான் ஆகிய படிப்புகளுக்கான CEETA நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்டுகளையும் இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட்டுகளை tancet.annauniv.edu/tancet என்கிற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.