ஜல்லிக்கட்டு மீதான தடையை விலக்கக்கோரி தமிழகம் முழுதும் போராட்டம் நடந்துவரும் நிலையில், உலக அளவிலும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன.  அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உட்பட பல நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

 

இந்த நிலையில் கடந்த செய்வாய்க்கிழமை லண்டன் வாழ் தமிழர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர். அங்குள்ள இந்தியத் தூதரகம் முன்பு கூடி போராட்டம் நடத்தினர்.

“தடை அதை உடை”, “மோதாதே மோதாதே தமிழகத்துடன் மோதாதே”, “ஜல்லிக்கட்டு தடையை நீக்கு பாரம்பரியத்தைத் தூக்கி நிறுத்து”, “தமிழா தமிழா ஒன்றுபடு வெற்றி வரும் வரை போராடு” என்று முழக்கமிட்டனர்.

லண்டன் நேரப்படி 17ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழர்கள் மட்டுமின்றி, பிற மொழி பேசும் இந்தியர்களும் கலந்துகொண்டனர்.

பீட்டாவைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.